சனி, 2 நவம்பர், 2013

கொக்கென்றால் கொக்கேயல்ல

களியாட்டத்தில் இருக்கும்
கொக்குகளால் மட்டுமன்றி
கவனத்தை ஈர்க்கும்
ஏரி மீன்களாலும்
பரிகாசத்திற்கு ஆளாகியிருந்தது
துணையை இழந்த கொக்கு.

சூழலின் சூட்சமத்தில்
சிக்கிக் கிடக்கும் செய்தியறிந்து

பழைய காதலைப்
புதுப்பித்துக் கொள்ள
முயன்று கொண்டிருந்தது
இரு குஞ்சுகளின்
தகப்பன் கொக்கு.

தூரத்து உறவுசொல்லி
தூண்டிலிட்டது
இளமைத்திமிரிலிருந்த
இன்னொரு கொக்கு.

பறக்கத்துடிக்கும் ஒன்று
சிறகு முளைக்காத மற்றொன்றைன
தகிப்பைத் தணிவிக்கும்
குஞ்சுகளிடையே
தவமாய்த் தவமியற்றிக்கொண்டிருக்கிறது
சலன நீர்ப்பரப்பில்
சஞ்சலத்துடன்
சாபம் வேண்டாத கொக்கு.

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. பாரதியின் வரிகளைப் போல் உங்கள் சொற்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே..
  ”கொக்கென்றால் கொக்கேயல்ல” அருமையான சிந்தனை. ஆழமான கருத்துக்கள். எத்தனை எத்தனை கொக்குகள் தவம் இருக்கின்றன சபலபுத்தி கொண்ட கொக்குகளிடம் சிக்காமல் தன் குஞ்சுகளுக்கே வாழ்க்கையை அற்பணித்து. பகிர்வுக்கு எனது அன்பு வாழ்த்துகளும் நன்றிகளும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவை உடன் வாசித்துக் கருத்தும் வாழ்த்தும் வழங்கியமைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 3. சபலபுத்தியால் சல்லாப இச்சையால்
  சந்ததிகளைதொலைக்கும் கொக்குகளுக்கு
  சபலமில்லா இக்கொக்கு நல்சாலை போட்டது .
  பழைய காதலைப்
  புதுப்பித்துக் கொள்ள
  முயன்று கொண்டிருந்தது
  இரு குஞ்சுகளின்
  தகப்பன் கொக்கு..
  நெடுநேரம் திரும்பவும் திரும்பவும் படித்தேன் .உங்கள் கவிதை ஒருபடி தேன் .

  பதிலளிநீக்கு
 4. கொக்கெனவோ நினைத்தாய் குமரனை கொங்கணவா?
  உறுமீன் வரும் வரை வாடியிருந்த கொக்குக் கவிஞன்.

  பதிலளிநீக்கு
 5. அய்யாவின் பாராட்டு என் பொறுப்பைக் கவனப்படுத்துகிறது. இன்னும் நான் செழுமைப்பட உதவும். தங்கள் கருத்து உரமாய் என்னை உரமூட்டும். நன்றி அய்யா.

  பதிலளிநீக்கு
 6. என் மனம் சொல்ல வந்த விசயங்கள் வேறு என்றாலும்

  கவிதை ரொம்ப அருமை முனைவர்

  பதிலளிநீக்கு
 7. தொகைவாழ்த்தாகத் தங்கள் பாராட்டு. நன்றி

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் ஐயா
  தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்
  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகம்மாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2014/06/teachers-in-web-world.html?showComment=1403974193240#c6401072316413391899

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 10. வலைச்சரம் மூலமாக தங்களின் பதிவுகளைப் பற்றி அறிந்தேன். பதிவினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
  www.drbjambulingam.blogspot.in
  www.ponnibuddha.blogspot.in

  பதிலளிநீக்கு