ஞாயிறு, 2 ஜூன், 2013

நானும் எங்கள் வீட்டுக்காரரும்(?)

நாங்கள் குடியிருப்பது
வாடகை வீடு
வசதியான வீடு
ரொம்பக் கெட்டிக்காரர்
வீட்டுக்காரர்
நீர் இறைக்கும்
இயந்திரத்தின்
மின் செலவு
மாதத்தில்
பதினைந்து நாள்கள்
எங்களுடையது
பதினைந்து நாள்கள்
அவருடையது
இப்போதெல்லாம்
தண்ணீரைச் சிக்கனமாய்ப்
பயன்படுத்துகிறோம்
அவர்கள்
பதினைந்து நாளில்
அவர்களும்
எங்கள்
பதினைந்து நாளில்
நாங்களும்.