வெள்ளி, 4 அக்டோபர், 2013

நானென்ன செய்ய?

என்னிடம் பேசும்போதெல்லாம்
எதையும் இருமுறை
சொல்ல வேண்டியிருக்கிறதெனச்
செல்லமாய்க் கோபிக்கிறாய்...
ஒவ்வொரு சொல்லையும்
 உச்சரிக்கும் உன் உதட்டசைவின்
சுழலில் கிறங்கிக் கிடக்கும்
கண்கள் காதுகளை
முந்திவிடுகின்றன
ஒவ்வொரு முறையும்...

7 கருத்துகள்:

 1. வணக்கம் நல்ல கவிதை.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. கிறக்கம் தெளியா
  கண்களில்
  எப்படி வருகிறது
  உறக்கம்?

  பதிலளிநீக்கு
 3. உறக்கம் எங்கே வருகிறது. கவிதையாய் அல்லவோ கனிகிறது. நன்றி நண்ப.

  பதிலளிநீக்கு
 4. ஆகா! சுழல் கூட சுகமாக மாறிப்போகுமோ! நல்லதொரு கவிதையை வடித்து பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள் சகோததரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைப்பூவிற்கு வந்து கவிதையை ரசித்துக் கருத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பா.

   நீக்கு
 5. தங்கள் கருத்துக்கு(ரசனைக்கும்) நன்றி.

  பதிலளிநீக்கு