வெள்ளி, 4 அக்டோபர், 2013

நானென்ன செய்ய?

என்னிடம் பேசும்போதெல்லாம்
எதையும் இருமுறை
சொல்ல வேண்டியிருக்கிறதெனச்
செல்லமாய்க் கோபிக்கிறாய்...
ஒவ்வொரு சொல்லையும்
 உச்சரிக்கும் உன் உதட்டசைவின்
சுழலில் கிறங்கிக் கிடக்கும்
கண்கள் காதுகளை
முந்திவிடுகின்றன
ஒவ்வொரு முறையும்...