செவ்வாய், 4 ஜூன், 2013

இனி யாரும்...

எந்த வேலை செய்தாலும்
 தனித்த முழு கவனம்
அதிலொரு செய்நேர்த்தி
முழுமையான செயல்பாடு

என்னையும் மகனையும்
கவனிப்பதிலும்
கவனம் வைப்பதிலும்
உள்ளார்ந்த உண்மையோடு
வெளிப்படும் தாய்மை

எப்போது சிரித்தாலும்
அடுக்கி வைத்த
பல்வரிசையில்
அடுத்தவரைப் பற்றிக்கொள்ளும்
வெள்ளை மனச் சிரிப்பு

எப்படிப்பட்டவரையும்
உடன்படத் தூண்டும்
கனிவான எளிய
இனிய பேச்சில்
வெளிப்படும் ஆளுமை

எவ்வளவு வேலைக்கிடையிலும்
பிறருக்கென உதவக் கிடைக்கும்
 தருணங்களைப்
பயனாக்கக் காட்டும்
சலிப்பில்லா உன்னத ஈடுபாடு

இவையெல்லாம்
மகிழ்வான
நெகிழ்வான நேரங்களில்
என்னைப்பற்றி
என்மனைவி பகிர்ந்த
என் பண்பு நலன்கள்

இனியாரும்
என்னைக் கேட்க முடியாது
உன்மனைவி
தன்முந்தானைக்குள்
உன்னை எப்படி முடிந்தாலென்று.

2 கருத்துகள்:

  1. அய்யா அவர்களுக்கு வணக்கம். ஆசிரியர் புத்தாக்க பயிற்சியில் கலந்து கொண்டேன். உஙகளை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் பக்கத்தில் இணைந்து இருப்பேன். சந்திப்போம் அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களோடு இணைந்திருப்பதில் மகிழ்ச்சி.நன்றியுடன் சு.துரைக்குமரன்

      நீக்கு