வெள்ளி, 2 மார்ச், 2012

இரவுத் தேவை

மலரும்
சொற்களுக்கிடையில்
மறைந்திருந்து
குத்தும்
முட்களின்
வலி உணர்ந்திருந்தும்
மலர்ச்சியின் கவர்ச்சியில்
மயங்கித்தான்
கிடக்கிறது மனது
மலரில் முள்ளையல்ல
முள்ளில் மலரைப்
 பார்ப்பதால் தானோ
ஏதோவொன்று
இந்த இரவுக்குத்
தேவையொரு சமாதானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக